பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு
கரூர்: காருக்குள் சிக்கிக்கொண்ட சிறுவனை, சரியான நேரத்தில் செயல்பட்டு போலீசார் காப்பாற்றினர்.
கரூர் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கரூரில் உள்ள ஜி.கே. பைனான்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக பணி புரிந்து வருகின்றார்.
இவர், காரை கழுவி சுத்தப்படுத்த வாங்கல் பாலமாள்புரம் அருகில் உள்ள காவிரி தண்ணீர் சப்ளையாகும் குழாய் ஏர் ஹோல் அருகே சென்று காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, வாளியில் தண்ணீர் நிரப்பும் வேலையில் கோவிந்தசாமி ஈடுபட்டார்
அப்போது, தன்னுடைய மூன்று வயது மகன் ஆனந்தையும் உடன் அழைத்து சென்றிருந்தார். காருக்குள் இருந்த சிறுவன் ஆனந்த், கோவிந்தசாமியின் சட்டை பாக்கெட்டில்
இருந்த கார் சாவியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, எதிர்பாராதவிதமாக காரின் கதவுகள் மூடிக் கொணடன. அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி, தனது உரிமையாளர் வீட்டில் மாற்று சாவி கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், காற்று இன்றி சிறுவன்
மயங்கி விழுந்தான்.
தகவல் அறிந்த பொது மக்கள் சிலர் முன் வந்து காரை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர்
மோகன்தாஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மற்றும் போலீசார் கார் கண்ணாடியை உடைத்து சிறுவனை உயிரோடு மீட்டனர்.
பிரச்சனைக்குரிய சம்பவம் தங்களது எல்லை இல்லை என்றாலும் , பிரச்சனையின் உக்கிரம் அறிந்து விரைந்து சாதுர்யமாக செயல்பட்டு சிறுவனின் உயிரை மீட்ட பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸை அனைவரும் பாராட்டினர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications