மாஜி டிஜிபி உறவினராக நடித்து எஸ்பியை ஏமாற்ற முயன்றவருக்கு காப்பு
நெல்லை: நண்பருக்கு உதவுவதற்காக நெல்லை எஸ்பியிடம் முன்னாள் டிஜிபியின் உறவினர் என்று நடித்து ஏமாற்ற முயன்ற திருப்பூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று பகல் 2.30 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மிடுக்காக வந்தார். அங்கு காவலுக்கு நின்ற ஆயுதப்படை வீரர் எர்னஸ்ட் ஆபிரகாமிடம் தான் முன்னாள் டிஜிபி ஸ்ரீபாலின் உறவினர் என்றும் ஒரு புகார் தொடர்பாக எஸ்பியை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கர்க் அவரை சந்திக்க உடனடியாக அழைப்பு விடுத்தார். சந்திப்பின் போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த எஸ்பி அவரிடம் தீர விசாரித்தார்.
அதில் அவர் திருப்பூர் கோல்டன்புரம் ஜெயலட்சுமி நகர் 12வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சதிஷ் என்றும் தனது நண்பரான சேட் ஒருவரின் வாகன பைனான்ஸ் விவகாரத்திற்காக தவறான தகவல் அளித்து எஸ்பியிடம் சிபாரிசு கோர வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து பாளை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து சதீஷை கைது செய்தனர்.
கைதான சதீஷ் திருப்பூரில் தனது மைத்துனருக்கு சொந்தமான ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். டிஐஜி ஸ்ரீபாலை பற்றி ஒரு தகவலும் தெரியாததால் எளிதில் சிக்கிக் கொண்டார்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications