ஒரு கட்சியின் தூண்டுதலால் என்னைப் பலிகடாவாக்குகிறது சிபிஐ - பூட்டா சிங்
டெல்லி: எனது மகன் சரப்ஜோத் சிங் கைது விவகாரத்தில் ஒரு அரசியல் கட்சியின் சதி உள்ளது. அந்தக் கட்சியின் தூண்டுதலால்தான் எனது மகனைக் கைது செய்த சிபிஐ இபபோது என்னையும் பலிகடாவாக்க முயலுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத் தலைவர் பூட்டா சிங்.
துப்புறவு காண்டிராக்டர் ராமாராவ் பாட்டீல் என்பவரிடமிருந்து ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக சரப்ஜோத் சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. அவரது வீட்டையும் ரெய்டு செய்து அங்கிருந்து துப்பாக்கி, தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ளனர். அது தொடர்பாக தனியாக ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்கியது பூட்டா சிங்கின் ஆலோசனையின்பேரில்தான் என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பூட்டாவையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சுத்தமாக பூட்டா சிங்கை கைகழுவி விட்டது.
இந்த நிலையில் சிபிஐயின் நடவடிக்கைக்கு ஒரு அரசியல் கட்சியே காரணம் என்று பூட்டா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு அரசியல் கட்சியின் சதியே இந்த நடவடிக்கைகளின் பின்னணியாகும். புலனாய்வு அமைப்பாக சிபிஐ செயல்படவில்லை. ஆனால் குற்றவாளி ஒருவருடன் சேர்ந்து கொண்டு என்னையும், எனது மகனையும், பலிகடாவாக்க முயலுகிறார்கள்.
என்னைப் பழி தீர்ப்பதற்காக எனது மகனை பகடைக் காயாக பயன்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து நான் பிரதமரிடம் ஏற்கனவே பேசியுள்ளேன். அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். யாரையும் நான் இப்போது குற்றம் சாட்ட விரும்பவில்லை. நேரம் வரும்போது நான் பேசுவேன். உரிய முறையில் உரிய இடத்தில் அதைத் தெரிவிப்பேன்.
உரிய முறையில் என்னை விசாரிக்க சிபிஐ வந்தால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன் என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அரசியல் நெருக்கடி எதுவும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறைக்கு எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications