காந்தியின் போதனைகள் குறித்து நூல் எழுத கார்டன் பிரவுன் விருப்பம்
லண்டன்: மகாத்மா காந்தியடிகள் அமைதி, அன்பு குறித்த போதித்த போதனைகள் குறித்து உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில், நூலாக எழுத விரும்புவதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறியுள்ளார்.
இதுகுறித்து குஜராத்தைச் சேர்ந்த ஆங்கில வார இதழான கரவி குஜராத்-த்துக்கு பிரவுன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...
20ம் நூற்றாண்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. அவர் போதித்த அகிம்சை, அன்பு, அமைதி போன்ற தத்துவங்கள், இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது. இன்றைக்கும் பொருந்தும் வகையிலான ஒப்பற்ற தத்துவம் அது.
அதுகுறித்தும், உலக நாகரீகத்திற்கு காந்தியடிகள் ஆற்றிய பங்கு குறித்தும் உலக மக்களுக்குத் தெரியும் வகையில் நூலாக எழுத விருப்பம் கொண்டுள்ளேன்.
காந்தியடிகள் ஒருபோதும் பதவியின் பின்னால் திரிந்ததில்லை. மக்கள் மனதையும், இதயங்களையும் கொள்ளை கொண்டவர் அவர். மக்களிடத்திலும் அவர் அன்பையும், அமைதியையும், சகிப்புத்தன்மையையும் விதைத்தார் என்று கூறியுள்ளார் பிரவுன்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications