பண்டல்கண்ட் தொடர்பாக அமளி - லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: பண்டல்கண்ட் பகுதியில் தனி வளர்ச்சி வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபா 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல ராஜ்யசபாவிலும் இந்தப் பிரச்சினை வெடித்து ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவில் இன்று பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.
அவர் பேசுகையில், பண்டல்கண்ட் பிரதேச வளர்ச்சிக்காக தனி வாரியம் அமைப்பது தொடர்பாக உ.பி. மற்றும் ம.பி. அரசுகளுடன் மத்திய அரசு உரிய முறையில் ஆலோசனைகளை நடத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார்.
கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்தப் பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என்று அவர் கோரினார்.
அதேபோல, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் எழுந்து, உ.பி. மாநிலத்தில் தத்ரி மின் திட்டத்திற்குரிய காஸ் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதைக் கண்டித்துப் பேசினார்.
இரு பிரச்சினைகளிலும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் மொத்தமாக எழுந்து பேசியதால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சபை மீண்டும் கூடியதும், கேஜி காஸ் விவகாரம் வெடித்தது. அதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா அளித்த விளக்கத்தால் மீண்டும் அமளி ஏற்படவே மீண்டும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்சினை ராஜ்யசபாவிலும் எதிரொலித்து அங்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications