சிபிஐ பெண் இன்ஸ்பெக்டருக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து தோடு, செயின் கொள்ளை
சென்னை: வெளி மாநிலங்களிலிருந்து சென்னை வரும் ரயில்களில் கை வரிசை காட்டி வரும் மயக்க பிஸ்கட் கொள்ளையர்கள், சிபிஐயைச் சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டரிடமே கைவரிசையைக் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் சிபிஐ பெண் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பிரேமலதா. இவர் மும்பை - சென்னை மெயிலில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் சென்னைக்குப் பயணித்தார்.
நேற்று ரயில் சென்னை வந்து சேர்ந்தபோது மயங்கிய நிலையில் இவர் பெட்டியில் கிடந்தார். ரயிலை சுத்தப்படுத்துவதற்காக வந்த துப்புறவுப் பணியாளர்கள், பிரேமலதா கிடந்த கோலத்தைப் பார்த்து பயந்து போய், அவரை உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து பிரேமலதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பிரேமலதாவின் கைப்பையை சோதனையிட்டபோது அவர் சிபிஐ இன்ஸ்பெக்டர் எனத் தெரிய வந்தது.
மயக்கம் தெளிந்து எழுந்த அவர் தனது தோடுகள், கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி ஆகியவை திருடு போயிருப்பதை உணர்ந்தார்.
போலீஸாரிடம் அவர் கூறுகையில், கடப்பாவில் நீட்டாக டிரஸ் அணிந்திருந்த ஒரு நபர் ஏறினார். பிரேமலதாவிடம் நட்பாகப் பேசிய அவர், குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை வாங்கி பிரேமலதா குடித்துள்ளார். ஆனால் அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்ததால் குடித்த சில நிமிடங்களில் பிரேமலதா மயங்கி விழுந்து விட்டார்.
அதன் பின்னர் அந்த ஆசாமி, பிரேமலதா அணிந்திருந்த தோடு, கழுத்துச் சங்கிலி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார்.
ஓடும் ரயில்களில் மயக்க பிஸ்கட், மயக்க மருந்து கொடுத்த குளிர்பானங்களைக் கொடுக்கும் கும்பல் குறித்து போலீஸார் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். அறிமுகம் இல்லாத யாரேனும் எதையாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு இன்ஸ்பெக்டரே அதிலும் சிபிஐ இன்ஸ்பெக்டரே இவ்வாறு குளிர்பானத்தை வாங்கிச் சாப்பிட்டு ஏமாந்தது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications