குடிநீர் இணைப்பில் மோசடி - நெல்லை மேயரிடம் மு.க. ஸ்டாலின் விசாரணை
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பில் 55 லட்சம் ரூபாய் மோசடி நடந்ததாக கூறப்படுவது குறித்து மேயர் சுப்ரமணியம் மற்றும் திமுக கவுன்சிலர்களிடம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரணை நடத்தவுள்ளார்.
நெல்லை மாநகராட்சியின் 17 வது வார்டு பகுதி குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், கட்டணமும் செலுத்தாமல் முறைகேடாக நூற்றுக்கணக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியில், ரூ 55 லட்சம் மோசடி நடைபெற்றதாக தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த தமிழக நகராட்சிகளின் நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் நெல்லை வந்து விசாரணை நடத்தினார்.
தங்கள் நிலை குறித்து விளக்க தி.மு.க மேயர் சுப்பிரமணியன் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் சென்னையில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விளக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நிதி மோசடியில் கவுன்சிலர்கள், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இளநிலை என்ஜினியர்களை சஸ்பெண்ட் செய்தது தவறு என்று என்று நெல்லை மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.
மேயர், கவுன்சிலர்களை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் சங்க நிர்வாகிகளும் தங்கள் பிரச்னையை துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் தர திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications