ஆடிப்பெருக்கு - காவிரியில் குளித்த நால்வர் பலி
சேலம்: ஆடிப்பெருக்கு விழாவின்போது காவிரி ஆற்றில் குளித்த நான்கு இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரின் கதி தெரியவில்லை.
நேற்று ஆடிப் பெருக்கு விழா காவிரிக் கரையோரப் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதேபோல நாமக்கல் மாவட்ட காவிரிக் கரையிலும் ஆடிப் பெருக்கு கொண்டாடப்பட்டது.
வேலகவுண்டன் பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற 17 வயது வாலிபர், ஆடிப்பெருக்கை யொட்டி, தனது நண்பர் மணிகண்டனுடன், ஆனங்கூர் காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது இருவரும் சுழலில் சிக்கி கொண்டனர். அவர்களை தண்ணீர் அடித்து சென்று விட்டது. இதில், ரஞ்சித்குமார் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மணிகண்டனை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதுபோல மோகனூரை சேர்ந்த செந்தில் குமார்(23) என்ற வாலிபர், செங்கத்துறை காவிரி ஆற்றில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் அவர் வெள்ளத்தில் சிக்கி இறந்தார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள கோணரம்பட்டியை சேர்ந்த சிவக்குமார்(23) என்ற வாலிபர், நேற்று அதிகாலையில் இடைப்பாடி அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது சிவகுமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்த மணிகண்டன்(24) என்ற வாலிபர் ஜேடர்பாளையத்தில், காவிரி ஆற்றில் குளித்தபோது, காணாமல் போய் விட்டார். அவரையும் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications