49 (O) பிரிவை பயன்படுத்துமாறு கூறி அதிமுக பிரசாரம்

சட்டசபை இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதிமுகவினர் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இந்த இடைத் தேர்தல் நிகழ்வுகளை அதிமுகவினர் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இளையாங்குடி அதிமுகவினர் நூதனப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிப்பதற்கு, 49(ஓ) படிவம் வாக்குச்சாவடிகளில் தரப்படுகிறது. இதை வாக்காளர்கள் பெற்று பூர்த்தி செய்து தரலாம்.
இந்தப் படிவத்தை பயன்படுத்துமாறு வீடு விடாக சென்று அதிமுகவினர் மக்களிடம் கூறி வருகின்றனர். ஓட்டுப் போடாதீர்கள் என்று கூறினால் சட்டப் பிரச்சினை வரும் என்பதால் அதற்குப் பதில், 49(ஓ) படிவத்தைப் பயன்படுத்துமாறு கூறி அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆனால் இப்படிச் செய்யுமாறு கட்சி மேலிடம் உத்தரவிடவில்லையாம். அவர்களாகவே இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், மற்ற தொகுதியில் உள்ள அதிமுகவினரும் இதேபோல செய்யலாமா என்று யோசித்து வருகின்றனர். இருந்தாலும் கட்சி உத்தரவிடாத நிலையில் நாமாக செய்து ஏதாவது ஆகி விடுமோ என்ற குழப்பத்திலும் உள்ளனராம்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications