கும்மிடிப்பூண்டி முகாமில் அகதிகள் மோதல் - தந்தை, 2 மகன்களுக்கு அரிவாள் வெட்டு
சென்னை: சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில், குடிபோதையில் இருந்த அகதிகள் செய்த அட்டகாசத்தைத் தட்டிக் கேட்ட தந்தை மற்றும் இரு மகன்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வநாயகம். இவரது மகன்கள் நாகேந்திரன், ஜெயந்தன்.
நேற்று இரவு இதே முகாமை சேர்ந்த வாலிபர்கள் ஜெகன், கிருபா, இளையராஜா, பிரபு, செல்வம் மற்றும் யோகேந்திரன் ஆகிய 6 பேர் குடிபோதையில் முகாமில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையுடன் சுற்றி கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்களை ஆபாசமாக திட்டி கொண்டிருந்தனர்.
இதை நாகேந்திரன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் நாகேந்திரன், தந்தை செல்வநாயகம், தம்பி ஜெயந்தன் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டியது.
நாகேந்திரன் தலையிலும் செல்வநாயகம் இடது கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. கவலைக்கிடமான நாகேந்திரன் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வநாயகமும் ஜெயந்தனும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகி விட்ட அந்த ஆறு அகதிகளையும் தேடி வருகின்றனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications