சங்கரராமன் கொலை வழக்கில் 3 சாட்சிகள் 'பல்டி'
புதுச்சேரி: காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகள் பல்டி அடித்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவிலில் வைத்து சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட தலைமை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இந்த வழக்கில் குறுக்கு விசாரணை தொடங்கியது.
சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா, மகள் அனந்த், காஞ்சி மடத்தின் கணக்காளர் கணேஷ் ஆகியோரிடம் விஜயேந்திரரின் வழக்கறிஞர் தினகரனும், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் தேவராஜும் இந்த நால்வரிடமும் குறுக்கு விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் மனைவி பத்மா பல்டி:
அப்போது அவர்கள் போலீஸ் காட்டிய புகைப்படங்களை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். எங்கள் வீட்டிலிருந்து போலீசார் எடுத்து வந்த கடிதத்தில் இருப்பது சங்கரராமனின் கையெழுத்து இல்லை. இந்த கடிதத்தை இப்போது தான் பார்க்கிறோம். எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று போது பல்டி அடித்தனர்.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது விஜயேந்திரரின் தம்பி ரகு, காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 20 பேர் ஆஜராகினர். ஆனால், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 4 பேர் ஆஜராகவில்லை.
இதில் 5 பேரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. துரைக்கண்ணு, கஜபதி, அச்சுதன் ஆகியோரிடம் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள், ஏற்கனவே குற்றவாளிகளின் போட்டாக்களை எங்களிடம் காட்டி குற்றவாளிகளை அடையாளம் காட்டும்படி போலீசார் கூறினர், அதன்படி தான் நாங்கள் அடையாளம் காட்டினோம் என்று முரணாக வாக்குமூலம் அளித்தனர்.
மற்ற 2 சாட்சிகளான குப்புசாமி, குமார் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 9ம் தேதிக்கு நீதிபதி கிருஷ்ணராஜா ஒத்திவைத்தார்.
ஜெயேந்திரரின் பவள விழா:
இந் நிலையில் ஜெயேந்திரரின் 75ம் ஆண்டு ஜெயந்தி (பவள விழா) நாளை தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி 75 பேருக்கு பசுக்கள் தானமாக வழங்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 75 கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் ஜெயந்திரருக்கு வழங்கப்படும். 75 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஜெயேந்திரர் பரிசுகளை வழங்குகிறார்.
75 வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயேந்திரரின் பிறந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள இருள்நீக்கி கிராமத்திலும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications