சுரேஷ்குமாரின் தலை எரிப்பு-குற்றப் பத்திரிக்கையில் போலீஸ்

சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ் குமார் நேமிசந்த் ஜெயின் என்பவால் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி 3 இடங்களில் வீசினான் நேமிசந்த். ஆனால், தலை மட்டும் சிக்கவில்லை.
இந்தத் கொலை வழக்கில் ஒனறரை மாதங்களுக்குப்பின் நேமிசந்த் கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டான்.
அவனிடம் போலீசார் விசாரித்தபோது, சுரேஷ் குமாரின் தலையை அடித்து உடைத்து நொறுக்கி எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள புதர் பகுதியில் வீசியதாக கூறினான்.
ஆனால், புதருக்குள் போலீசார் பல நாட்கள் தேடியும் தலை கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந் நிலையில் இந்த தலை பிரச்சனைக்கு போலீசார் புதிய தீர்வு கண்டுள்ளனர். அதன்படி நேமிசந்த் தலை பகுதியை வீசியதாக சொன்ன புதர் பகுதியையொட்டிய குப்பைமேட்டிலிருந்து வழக்கமாக குப்பை அள்ளும் மாநகராட்சி லாரி அதையும் சேர்த்து வாரிச் சென்றுள்ளது.
இந்த குப்பைகளோடு கலந்து விட்ட சுரேஷ் குமாரின் நொறுங்கிய தலைபகுதியை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளோடு தீவைத்து எரிக்கப்பட்டுவிட்டது. எனவே தலை பகுதியை கைப்பற்ற முடியவில்லை என்று குற்றப் பத்திரிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தலை கிடைக்காவிட்டாலும் இந்த வழக்கில் நேமிசந்த் தப்ப முடியாது என்று போலீசார் கூறுகின்றனர். கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து அது சுரேஷ் குமாரின் உடல் தான் என்பது உறுதியாகிவிட்டதாலும், நேமிசந்தின் வீட்டில் கிடைத்த தடயங்களில் அங்கு தான் சுரேஷ் கொல்லப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாலும் நேமிசந்துக்கு உயர்ந்தபட்ச தண்டனை கிடைப்பது உறுதி என்று போலீசார் நம்புகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications