அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்த மம்தா
டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.
டெல்லியில் இருந்து கொண்டே நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு வாரங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்திய மம்தா இம்முறை கூட்டத்தையே புறக்கணித்துள்ளார்.
அமைச்சர்கள் இல்லாததால் அவையில் அமளி..
இதற்கிடையே மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா மக்களவையில் இல்லாததால் அவையில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
ரப்பர் தொடர்புடைய மசோதா ஒன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் அந்தத் துறையி்ன அமைச்சர் ஆனந்த் சர்மா, அவரது துறையின் இணையமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவையில் இல்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இரு அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்க வெளிநாடு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications