மலேசியா உதவியுடன் கடத்தப்பட்டு தாய்லாந்தில் கேபி கைது!!

ஆனால் தாய்லாந்தில் வைத்து இவரைக் கைது செய்ததாக இலங்கைத் தரப்பில் கூறப்படுகிறது. உண்மையில் மலேசியாவில்தான் கேபியை மலேசிய உளவுப் படையினரும், இலங்கை உளவுப் படையினரும் பிடித்ததாக தெரிகிறது.
ஆனால் மலேசியாதான் கேபியைப் பிடித்துக் கொடுத்ததாக வந்து விடக் கூடாது என்பதற்காக அவரை பாங்காக் கொண்டு சென்று அங்கு வைத்து பிடித்துக் கைது செய்ததாக இலங்கை தரப்பு செய்தி பரப்புவதாக புலிகள் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர் கேபி. புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செய்து வந்தவர். சர்வதேச உறவு விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்து வந்தார்.
பிரபாகரன் மறைவுக்குப் பின்னர் புலிகள் இயக்கத் தலைவராக இவர் அறிவிக்கப்பட்டார். இவரது தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த நோக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் மெல்ல மெல்ல அடியெடுத்து நடக்க ஆரம்பித்த நிலையில் தற்போது கேபி கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2 நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரில் வைத்து மலேசியா மற்றும் இலங்கை உளவுப் படையினரால் கேபி கைது செய்யப்பட்டுள்ளார் என்று புதினம் இணையம் கூறுகிறது.
இதுகுறித்து புதினம் செய்தியில் கூறியிருப்பதாவது:
புதன்கிழமை பிற்பகலில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள டியூன் ஹோட்டல் (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த - விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.
பிற்பகல் அளவில் - ஜலான் துராங்கு அப்துல் ரஹ்மான் வீதியில் இருக்கும் குறிப்பிட்ட டியூன் ஹோட்டலுக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், நடேசனின் உறவினர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.
பிற்பகல் 2 மணியளவில் - தனக்கு வந்த ஒரு செல்போன் அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
செல்வராஜா பத்மநாதன் மலேசிய உளவுப் பிரிவு அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை உளவுப் பிரிவினரால், கடத்தப்பட்டதாகவே தெரிகிறது.
அதே வேளையில் வேறு ஒரு பெரிய வெளிநாட்டு உளவுத்துறையின் ஆசீர்வாதமும் அனுசரணையும் கூட இந்தக் கடத்தலுக்கு இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழர் வட்டாரங்களில் நிலவுகின்றது.
அதேசமயம், செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசுத் தரப்பு நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்தக் கடத்தலுடன் மலேசிய பதுகாப்பு மற்றும் உளவு வட்டாரங்களுக்கு இருக்கும் தொடர்பை மறைத்து திசை திருப்பும் நோக்குடனேயே இவ்வாறு தகவல் வெளியிடப்படுகின்றது என்று கருதப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட செல்வராஜா பத்மநாதன் நேற்றே விமானம் மூலம் கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேபியின் புதிய படம்...
கேபி கைது செய்யப்பட்டிருப்பது புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், கேபியின் புதிய புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதில் இருப்பவரே உண்மையான கேபி என்று தெரிகிறது.
இந்தியாவால் தேடப்பட்டு வருபவர்
கேபி இன்டர்போல் போலீஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வருபவர். இவரைப் பிடிக்க ஐந்து முறை இன்டர்போல் ரெட் அலர்ட் பிறப்பித்தது.
இலங்கை மட்டுமல்லாது இந்தியாவின் சிபிஐயும் இவரைத் தேடி வந்தது. ராஜீவ் காந்தி படுகொலையில் இவருக்கு நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் ஐந்து நாட்கள் கழித்து மும்பை வழியாக இந்தியாவிலிருந்து கேபி தப்பியதாக சிபிஐ கூறுகிறது.
இந்தியா, இலங்கை மற்றும் இன்டர்போல் ஆகியவற்றால் தேடப்பட்டு வந்த கேபி தற்போது பிடிபட்டுள்ளது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்க மேலும் ஒரு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications