அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யட்டுமே-ஸ்டாலின்
மதுரை: மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்ததாக கூறும் ஜெயலலிதா தனது கூட்டணி கட்சி எம்பிக்கள் 12 பேரையும் ராஜினாமா செய்யச் சொல்லட்டுமே. அதை அவர் செய்வாரா என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில்,
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டு வந்துள்ளேன். மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பல இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். அவற்றை விட சிறப்பான வெற்றியை இந்த இடைத் தேர்தலில் பெறுவோம்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக 5 தொகுதிகளின் இடைத் தேர்தல்களை புறக்கணிப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். இன்றைக்கு சொல்வதை நாளைக்கு அவர் மாற்றிச் சொல்வார். தான் போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர் தான். எனவே அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை.
மின்னணு எந்திரத்தில் முறைகேடு, ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவில்லை என்றெல்லாம் கூறும் ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்றுள்ள 12 எம்.பிக்களையும் ராஜினாமா செய்ய சொல்லட்டுமே. ராஜினாமா செய்துவிட்டு இப்படி சொல்லட்டுமே. அதை அவர் செய்வாரா என்றார்.
அதிமுக எம்.பிக்கள் விலகத் தயாரா?-காங்:
மின்னணு இயந்திரங்களைக் குறை கூறும் ஜெயலலிதா, தனது கட்சி சார்பில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களை ராஜினாமா செய்யுமாறு கூறுவாரா என்று காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சுதர்சனம் சவால் விட்டுள்ளார்.
கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மின்னணு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதால்தான் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்ததாக ஜெயலலிதா கூறுகிறார். நாங்கள் ஒரு வேளை மோசடி செய்திருந்தால், 27 இடங்களில் வென்றிருப்பதற்குப் பதில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் வென்றிருப்போம்.
2001ம் ஆண்டு அதிமுக தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. கடந்த லோக்சபா தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெற்றது. இங்கெல்லாம் கூட மின்னணு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. அப்படியானால் இங்கெல்லாம் அதிமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றதா?
ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஐந்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரி, அதிக அளவிலா வாக்குகளைப் பெற்றுத் தரும் மாவட்டச் செயலாளருக்கு 25 பவுன் தங்கச் சங்கிலி தருவதாக கூறியுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியிலும், அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு தங்கப் பதக்கம் தரப்படும் என்றார் சுதர்சனம்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications