இ.என்.டி.எல்.எப் தலைவர்கள் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு

இந்த சந்திப்பின்போது 1987ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நடவடிக்கைகளை இலங்கையிடம் வலியுறுத்துமாறும் அவர்கள் பிரதமரை கேட்டுக் கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்பரசும் உடன் இருந்தார். பிரதமரிடம், ஈழத் தலைவர்கள், இலங்கையின் தற்போதையை நிலையை விளக்கிக் கூறினர்.
பின்னர் அன்பரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே இடையே ஏற்பட்ட இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கையை வற்புறுத்த வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டோம். மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய ஐ.நா. அமைதிப் படையை இலங்கையில் நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.
இலங்கையில் தற்போது உள்ள நிலை குறித்து தான் அறிவதாகவும், தமிழர்கள் சம உரிமைகளுடன் வாழ வழி செய்ய தொடர்ந்து முயற்சிப்பதாகவும் பிரதமர் ஈழத் தலைவர்களிடம் உறுதியளித்தார்.
மேலும், போர் பாதித்த பகுதிகளில் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா ரூ. 500 கோடி நிதியுதவியை அளித்திருப்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
இந்த சந்திப்பின்போது இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமரை நான் கேட்டுக் கொண்டேன் என்றார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications