தென்காசியில் போக்குவரத்து விதி்மீறல் - 10 ஆயிரம் வழக்குகள் பதிவு
தென்காசி: தென்காசி காவல்துறை சரகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 10 ஆயிரம் மோட்டார் வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி சீனிவாசன் தெரிவித்தார்.
தென்காசியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தென்காசி சரகத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் சட்டம்-ஓழுங்கு பிரிவினர், போக்குவரத்து காவல் பிரிவினர், நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினர் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையுள்ள 8 மாத காலத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 36 வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
528 பேர் மீது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாகவும், 116 பேர் மீது செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 50 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.











Click it and Unblock the Notifications