முத்துக்கருப்பன் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன!
சென்னை: நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் மூலமாக பிரபலமான முன்னாள் சென்னை ஆணையர் முத்துக்கருப்பன் மீதான 2 ஊழல் வழக்ககுளை கைவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் முத்துக்கருப்பன் சென்னை நகர ஆணையராக நியமிக்கப்பட்டார். இவரை வைத்து கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்ய உத்தரவிட்டார் ஜெயலலிதா.
அந்த சம்பவத்திற்குப் பின்னர் முத்துக்கருப்பன் ஊழல் புகாரில் சிக்கினார். சென்னை அண்ணா நகரில் நிலத்தை அபகரித்தது, மினரல் வாட்டர் கம்பெனி நடத்தியது, பால் பண்ணை நடத்தியது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஆகிய சர்ச்சைகளில் சிக்கினார்.
மேலும், 20 போலீஸாரை தனது பால் பண்ணை மற்றும் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலைக்கு பயன்படுத்தியது தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இதையடுத்து முத்துக்கருப்பனை ஜெயலலிதா சஸ்பெண்ட் செய்தார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் முத்துக்கருப்பன்.
2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை விலக்கப்பட்டது. திருச்சி ஆயுதப் போலீஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீதான இரு ஊழல் புகார்களையும் கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை இருந்து வந்த ஊழல் சர்ச்சையிலிருந்து விடுபட்டுள்ளார் முத்துக்கருப்பன்.
மதுரையைச் சேர்ந்த முக்கியப் புள்ளியை முத்துக்கருப்பன் நாட, அவரது ஆசியின் பேரிலேயே இப்போது ஊழல் புகாரிலிருந்து முத்துக்கருப்பன் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் தலைமையிடம் நெருக்கமாக இருந்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஓரம் கட்டப்பட்டிருந்த சிவனாண்டி, திமுக ஆட்சியுடன் தற்போது ராசியாகி, முக்கியப் பதவியை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், இப்போது முத்துக்கருப்பனும், திமுக ஆட்சியுடன் ராசியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோர் (இவர்களும் கூட கருணாநிதி நள்ளிரவுக் கைது சம்பவத்தை அரங்கேற்றிய குழுவில் இடம் பெற்றிருந்தர்கள்தான்) இன்னும் சாதாரண பதவிகளில் உழன்று கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications