ராகிங் செய்தால் டிஸ்மிஸ் - அண்ணா பல்கலை. துணைவதேந்தர் எச்சரிக்கை
சென்னை: ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, ஏ.சி. டெக் கல்லூரி, எஸ்.ஏ.பி. கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளிலும் இளநிலை படிப்பில் 1700 பேரும் முதுநிலை படிப்பில் 1500 பேர் உள்பட மொத்தம் 3200 பேர் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். சீனியர் மாணவர்கள் 6 ஆயிரத்து 600 பேர் உள்ளனர்.
புதிதாக சேர்ந்த மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் ராக்கிங்கில் ஈடுபட மாட்டோம். அதற்கான தண்டனை பற்றி தெரியும் என்று உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கி உள்ளோம்.
ஏதாவது ஒரு மாணவர் ராக்கிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவருக்கு எக்காரணத்துக்காகவும் மன்னிப்பு கிடையாது. எச்சரித்து விடும் பேச்சுக்கும் இடமில்லை. உடனடியாக கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்.
3 ஆண்டுகள் அந்த மாணவர் வேறு எந்த கல்லூரியிலும் சேர முடியாது. போலீசிலும் வழக்குப்பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.
சீனியர் மாணவர்களை அழைத்து டீன்கள் மற்றும் துறை தலைவர்கள் பேசி உள்ளனர். ராக்கிங் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.
ராக்கிங் பற்றி புகார் தெரிவிக்க பல்கலைக்கழக வளாகத்தில் முக்கிய இடங்களில் கருப்புப் பெட்டிகள் என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்படும்.
ராக்கிங் செய்யும் மாணவர்கள் பற்றிய புகார்களை இந்த பெட்டியில் போடலாம். தினமும் காலையிலும், மாலையிலும் திறந்து பார்த்து புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ராக்கிங் தொடர்பாக கண்காணிப்பதற்காக 5 பேராசிரியர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் பற்றி கல்லூரி முதல்வர்களே போலீசில் புகார் செய்யலாம் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications