காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 1500 பாக். தீவிரவாதிகள்
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ சுமார் 1500 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எல்லை பகுதியில் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோட்டு பகுதியை தாண்டி இந்தியாவுக்குள் அடிக்கடி ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதே போல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கவிருக்கும் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் அந்த அமைப்பு கடந்த மூன்று வாரத்தில் சுமார் 50 தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்துள்ளதாக உளவு துறை செய்திகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் மேலும், சுமார் 1500 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இவர்கள் சிறு சிறு குழுக்களாக ஊடுருவ முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதை முறியடிக்க அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊடுருவிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் இரவு, பகலாக செயல்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் லஷ்கர் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47, வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் காஷ்மீரில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை முழு பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில ராணுவ உயரதிகாரிகள் கூட்டம் நேற்று ஜம்முவில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் இருக்கும் நாக்ரோடா பகுதியில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட காஷ்மீர் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகரும், லெப்டினன்ட் ஜெனரலுமான ஆர்.கே.சாமி கூறுகையில்,
எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் அதிகளவில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் காஷ்மீர் பகுதியில் அமைதியை சீர்குலைக்க நாசவேலைகளில் ஈடுபடலாம். அவர்களை ஓடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications