நெருங்கி வரும் சுதந்திர தினம்-நெல்லையில் 2 அடுக்கு பாதுகாப்பு
நெல்லை: சுதந்திர தின விழாவையொட்டி நெல்லையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
சுதந்திரம் பெற்ற ஆண்டுகளி்ன் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சுதந்திர விழா கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இவற்றை தொடர்ந்து முன்னெச்சரிக்கை தமிழகத்தில் பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லையில் டவுன், பெருமாள்புரம், மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டப்பட்ட 10 பைக்குகள் பறி்முதல் செய்யப்பட்டன. லாட்ஜிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கலெக்டர் அலுவலகம், மற்றும் வஉசி மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த ஆண்டும் 2 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு வரும் அனைவரும் மெட்டல் டிடேக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். இது தவிர மைதானத்தை சுற்றியுள்ள கட்டிடங்களில் மாடியில் இருந்து சுழலும் கேமரா மூலம் போலீசார் கண்காணிக்கின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications