ஆஸியில் தொடரும் அட்டகாசம் - பேட், பீர் பாட்டிலால் தாக்கப்பட்டார் இந்தியர்
சிட்னி: இந்தூரைச் சேர்ந்த மாணவர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேஸ்பால் பேட் மற்றும் பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் மோஹித் மங்கல். பொறியியல் மாணவரான இவர் சிட்னியில் படித்து வருகிறார். சனிக்கிழமை இரவு சிட்னியில் தான் பகுதி நேரமாக பணியாற்றி வரும் வர்த்தக வளாகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.
பீர் பாட்டிலை உடைத்து மங்கலின் தலையில் அவர்கள் அடித்துள்ளனர். பின்னர் ஒரு பேஸ்பால் பேட்டால் தாக்கியுள்ளனர். இதில் மங்கலுக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில்தான் ஆஸ்திரேலியா சென்று இனவெறித் தாக்குதல் குறித்து அந்த நாட்டு பிரதமர் கெவின் ரூட்டுடன் பேச்சு நடத்தி விட்டுத் திரும்பினார்.
அதன் பின்னர் மங்கலையும் சேர்த்து நான்கு இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் இந்தியர்கள் தரப்பில் பெரும் அச்சம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications