சைட்ரியன் வென்சர்ஸ்.. நாராயண மூர்த்தி முதலீடு!
Subscribe to Oneindia Tamil

இந்த நிறுவனம் ரூ.745 கோடிகளை முதலீடாகப் பெற திட்டமிட்டுள்ளது. இதன் ஆலோசகர்களாக ரகுநாத் ஆனந்த் மஷேல்கர் மற்றும் ராஜேந்திர கே பச்சூரி ஆகியோர் உள்ளனர்.
ஆரம்ப முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக சில மாதங்களுக்கு முன் நாராயணமூர்த்தி தெரிவித்திருந்தார். குறைந்த விலையில் வீடு கட்டித் தரும் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து நாராயண மூர்த்தி தரப்பிலிருந்து கருத்தறிய முடியவில்லை. இந்த சைட்ரியன் வென்சர்ஸ் நிறுவனத்தில்தான் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி சீனியர் அஸோஸியேட்டாக உள்ளார்.
சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள இந்த நிறுவனம், அமெரிக்காவின் வளரும் நிறுவனங்களுக்குத் தேவையான முதலீட்டை வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications