சூ கி சிறை தண்டனையை 18 மாதமாக குறைந்தது மியான்மர் அரசு
யாங்கோன்: மியான்மர் ஜனநாயக தலைவி ஆங் சான் சூ கிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு தண்டனையை 18 மாதங்களாக மியான்மர் ராணுவ அரசு குறைத்துள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை ஒழித்துவிட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்ற நோக்கில் ஆங் சான் சூ கி அகிம்சை முறையில் போராடி வருகிறார். அவர் மீது பல்வேறு குற்றங்களைச் சாட்டி மியான்மர் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
சமீபத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட வீட்டுகாவல் முடிவடைந்தது. இதையடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், வீட்டுக்காவலில் இருந்த அவர் தனது வீட்டுக்குள் அமெரிக்கர் ஒருவரை நுழைய அனுமதித்ததாக கூறி புதிய வழக்கைத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் தண்டனை விதித்தது. மேலும், எட்டாவ் எனப்படும் அந்த அமெரிக்கருக்கு மூன்று வழக்கின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.
இந் நிலையில் சூ கிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அந்நாட்டு ராணுவ ஜெனரல் தானே சுவே 18 மாதங்களாக குறைத்துள்ளார்.
சூ கிக்கு மீண்டும் தண்டனை விதிக்கப்பட்டது குறி்த்து இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில், வரும் 2010ல் மியான்மரில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் அவர் போட்டியிட கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications