சாலை பாதுகாப்பு வரியை ரத்து செய்க - லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
நாமக்கல்: புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு வரி முறையினை ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
தமிழக அரசு 21.07.2009 அன்று விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக சாலை பாதுகாப்பு வரியை கொண்டு வந்துள்ளது. இந்த வரி இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனம் வரை போட்டப்பட்டுள்ளது.
இதனால் புதிதாக வாகனம் வாங்குவோர் அதை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும் போது இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ 500ம், கார்களுக்கு ரூ 1,500ம், லாரிகளுக்கு ரூ 2,500ம் வரியாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
ஏற்கனவே, லாரி உரிமையாளர்கள் சாலை வரி, சுங்க வரி, பசுமை வரி போன்ற பல்வேறு வரிகளை அரசுக்கு முறையாக செலுத்தி வருகின்றோம்.
மேலும், லாரி உரிமையாளர்களிடம் இருந்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு நிதியாக, காலாண்டு வரி செலுத்தும் வருகிறோம். தற்போது அதையும் ஒரு சதவீதம் கூடுதலாக அரசுக்கு செலுத்தி வருகின்றோம்.
சாலைகளில் விபத்து ஏற்படும் போது எதிரே வருகின்ற பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்யும் போது மூன்றாம் நபர் காப்பீடு என்ற பாலிசிக்கும் லாரி உரிமயாளர்கள் பணம் செலுத்தி வருகின்றோம்.
இவ்வாறு நாங்கள் அரசுக்கு பல வழிகளில் வரி செலுத்தி வருகின்றோம். இதில் மேலும் ஒரு வரியை எங்கள் மீது திணித்தால் எங்களால் தொழில் செய்ய முடியாது. இந்த வரியால் லாரி தொழில் நலிவடையுமே தவிர வளர்ச்சி பெறாது.
எனவே இந்த சாலை பாதுகாப்பு வரியை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications