பங்கு வர்த்தகத்தில் முறைகேடு - இந்தியா புல்ஸ் துணைத் தலைவர் கைது
கொல்கத்தா: இந்தியாபுல்ஸ் செக்யூரிட்டிஸ் என்ற பங்கு வர்த்தக நிறுவனத்தின் துணைத் தலைவரான சித்தார்த் தாகா, ஆன்லைன் பங்கு வர்த்தக முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவரின் ஆன்லைன் பங்கு வர்த்தக கணக்கில் புகுந்து முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா காவல்துறையின் இணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறுகையில், அருணவா சக்கரவர்த்தி என்பவரின் ஆன்லைன் வர்த்தக கணக்கை ஹேக் செய்து அதில் புகுந்து மோசடி செய்துள்ளார் சித்தார்த் தாகா.
இதன் மூலம் அருணவா சக்கவர்த்திக்கு ரூ. 46 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. முறைகேடான, சட்டவிரோதமான வழியில் அருணவா கணக்கில் வர்த்தகம் செய்துள்ளார் தாகா. இதன் மூலம் அவருக்கு பெரும் பணம் கிடைத்துள்ளது.
தனது கணக்கில் நுழைய அருணவா முயன்றபோது லாக் இன் செய்ய முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் விசாரணையில் இறங்கியபோது இந்தியாபுல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தனது கணக்கைப் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் தாகா சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட தாகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 18ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications