வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ் கைது
நெல்லை: பாளையங்கோட்டையில் போலீஸ் வேடமிட்டு வாகனங்களில் சென்றவர்களிடம் வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள இஸ்மாயில் நகரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் நேற்று தனது நண்பர் சிதம்பரம் என்பவருடன் தனது காரில் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர்கள் கேடிசி நகர் அருகே வந்த போது ஒரு போலீஸ்காரர் அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து பணம் வாங்கி கொண்டிருந்தார். அவர், ஜெயராமனின் காரையும் மறித்து சோதனை நடத்தினார். பின்னர் ஜெயராமனிடம் காருக்கான ஆவணங்களை கேட்டார்.
ஜெயராமன் அனைத்து ஆவணங்களை காட்டிய பிறகு்ம் அந்த போலீஸ்காரர் பணம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து ஜெயராமன் அவரிடம் நீங்கள் எந்த காவல் நிலையத்தில் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
ஆனால் அந்த நபர் அவர் சரியான பதில் கூறாமல் மழுப்பினார். இதையடு்தது ஜெயராமன் நெல்லை மாநகர போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த போலீஸ்காரர் தப்பியோட முயன்றார்.
அப்போது அவரை பிடித்த ஜெயராமன், பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், அவர் தான் போலீஸ்காரர் இல்லை என்றும், பணத்துக்காக போலீஸ் வேஷமிட்டு வசூல் வேட்டை நடத்தியதாகவும் ஒப்பு கொண்டார். பின்னர் தனது பெயர் பாஸ்கர் மணி என்றும், பாளை கிருஷ்ணபுரத்தை சேர்ந்த நவமணி என்பவரின் மகன் என்றும் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications