கொலை, கொள்ளையில் ஈடுபட்ட வி.சி. பிரமுகர் கைது
கரூர்: கரூர் அருகே தொடர் கொலை, கொள்ள சம்பவங்களில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் தெரசா ஸ்கூல் ரவுண்டானா அருகில் சிவசக்தி நகரை சேர்ந்த மகேஷ்குமார் என்பவரிடம் இரண்டு பேர் கத்தியை காட்டி அவரது வாட்ச், செல்போன் மற்றும் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இது குறித்து மகேஷ்குமார், பசுபதிபாளையம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஏ.டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையில் டி.எஸ்.பி. இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் மோகன்தாஸ், கண்ணையன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை விசாரணையை துவக்கியது.
விசாரணையில் இந்த சம்பவத்துக்கு வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த முருகேசன் என்கிற முகிலன்(39) என்பவர் தான் காரணம் என்பது தெரியவந்தது.
போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட முருகேசன், நன்னியூர் விஏஓ காமராஜிடம் சரணடைந்து குற்றம் குறித்து ஒப்புதல் அளித்தார். இதையடுத்து தனிப்படை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் முருகேசனை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பேரில் அவரது கூட்டாள் வாங்கலை சேர்ந்த இளையராஜா (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும், இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி கருணாநிதி முன் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளிவான முருகேசன், கரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கரனுடைய கார் டிரைவர் என்பது தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications