கம்பம் திமுக வேட்பாளரை நாய் கடித்தது!
கம்பம்: கம்பம் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை நாய் கடித்தது.
இடைத் தேர்தலில் போட்டியிடும் ராமகிருஷ்ணன் கம்பம் யாதவர் தெருவில் திமுகவினருடன் மேள தாளத்துடன் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தைக் கண்டு மிரண்டு ஓடிய நாய் வேட்பாளர் ராமகிருஷ்ணனை காலில் கடித்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற அவர் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவத்தால் பிரச்சாரம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
வாக்காளர்களுக்கு திமுக வேட்டி-சேலை?:
இந் நிலையில் இந்தத் தொகுதியில் வாக்காளர்களுக்கு விதிமுறைகளை மீறி வேட்டி, சேலை மற்றும் பணம் வழங்கினால் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இத் தொகுதியில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வேட்டி, சேலைகள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதாக தேமுதிக வேட்பாளர் அருண்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜப்பன் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, வாக்காளர்களுக்கு வேஷ்டி, பணம் மற்றும் பொருள்கள் வழங்கினால், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications