சென்னை சர்வக்னர் சிலை-எதியூரப்பா திறந்து வைத்தார்
நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அன்பழகன், சபாநாயகர் ஆவுடையப்பன், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் ஆச்சாரியா உள்ளிட்ட கர்நாடக அமைச்சர்கள், பெங்களூர் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், சென்னை கன்னடா சங்கத்தின் தலைவர் அட்டவார் ராமதாஸ், நடிகர்கள் ரஜினி காந்த், அவரது மனைவி லதா, கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ், கவிஞர் வைரமுத்து, தி.க. தலைவர் கி.வீரமணி, எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிடேடார் கலந்து கொண்டனர்.
மற்றும் கர்நாடகத்திலிருந்து ஏராளமான கன்னடர்களும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்காக கர்நாடக அரசு ஏராளமான பேருந்துகளை சென்னைக்கு இயக்கியது.
பெங்களூரில் கடந்த 9ம் தேதி திருவள்ளுவரின் சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அயனாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வக்னரின் சிலை இன்று மாலை திறக்கப்பட்டது.
கன்னடா சங்கா பள்ளிக்கு எதிரில் உள்ள ஐ.சி.எப். ஜீவா பூங்காவில் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜீவா பூங்காவில் இடம் போதாது என்பதால் அதற்கு அருகில் உள்ள ரயில்வே பாதுகாப்புத் திடலில் விழா நடைபெற்றது.
வீடியோ கான்பரன்சிங் முறையில் சிலையை எதியூரப்பா திறந்து வைத்தார். வெகு தூரத்தில் இருப்பவர்களும் விழாவை காண வசதியாக 8 எல்.சி.டி. டிவிகள் வைக்கப்பட்டிருந்தன.
விழாவி்ல் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு வெள்ளியால் ஆன மாபெரும் திருவாரூர் தேரின் சிலையையும், சர்வஞ்னர்-எதியூரப்பா ஆகியோர் அடங்கிய ஓவியத்தையும் முதல்வர் கருணாநிதி பரிசளித்தார். அந்த ஓவியத்தில் கருணாநிதி தனது கையெழுத்தையும் இட்டுத் தந்தார்.
விழா செய்திகளை சேகரிக்க கர்நாடகத்தில் இருந்து 100 பத்திரிகை மற்றும் டெலிவிஷன் நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள், வீடியோகிராபர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் பழைய எம்.எல்.ஏ. விடுதியிலும், ஹோட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டனர்
.
கன்னட நிருபர்கள், செய்தியை பெங்களூருக்கு அனுப்புவதற்கு வசதியாக, விழா நடைபெறும் மைதானம் அருகில் 10 இன்டர்நெட் வசதி கொண்ட கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.
கன்னடத்தில் செய்திகளை டைப் செய்து அனுப்புவதற்கு வசதியாக கன்னட மொழி சாப்ட்வேரும் அந்த கம்ப்யூட்டர்களில் லோட் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக டாக்டர் சீர்காழி சிவ சிதம்பத்தின் பாடல் இடம் பெற்றது. அதன் பின்னர் கன்னட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
எதியூரப்பாவுக்கு வரவேற்பு:
முன்னதாக இன்று காலை சென்னை வந்த எதியூரப்பாவுக்கு விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, பரிதி இளம்வழுதி, பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் வரவேற்றனர். தாரை தப்பட்டை முழங்க அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்













Click it and Unblock the Notifications