டாஸ்மாக் கடையில் பெரும் தீ - பாட்டில்கள் வெடித்துச் சிதறின - ரூ. 7.5 லட்சம் சேதம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 7.5 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் வெடித்துச் சிதறின.
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் மதுபான கடையில் திடீரென்று தீ கொளுந்து விட்டு எரிந்தது. அனல் தாங்காமல் மது பாட்டில்கள் வெடித்து சிதறின.
இது பற்றி செங்கல்பட்டு போலீசுக்கு தகவல் போனது. தீயணைப்புப் படையினரை உஷார்படுத்தினர் போலீஸார்.
உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 987 மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதம் அடைந்தன. மது விற்பனை செய்த பணம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 989 ரூபாயை பணப்பெட்டியில் வைத்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக பணம் தப்பியது.
மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications