தங்கபாலுவை நீக்க கோரி நாடார்கள் உண்ணாவிரதம்
சென்னை: இடைத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடார் சமுதாய வேட்பாளரை நிறுத்தாத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவை அந்தப் பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடார் மகமை பரிபாலன சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் எழும்பூரில் உள்ள நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க கட்டிடத்தில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் 200 பேர் கலந்து கொண்டனர்.
இதில், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவாக இருந்த செல்வராஜின் மனைவியை வேட்பாளராக நிறுத்தாத தங்கபாலுவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனால் தங்கபாலுவை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இல்லாட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை நாடார் சமுதாயத்தினர் புறக்கணிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த உண்ணாவிரதத்தை வெளியில் நடத்த நாடார் சங்கம் திட்டமிட்டிருந்தது. இதையடுத்து இந்த உண்ணாவிரத்துக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் தாமோதரன் தலைமையில் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் நாடார் சங்கத்தினரின் உண்ணாவிரதத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து நாடார் சங்கத்தினர் தங்கள் சங்க அலுவலக கட்டிடத்திலேயே இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications