பன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்-பிரதமர்

நாட்டின் 62வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் கோலாகலமான விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் பேசுகையில்,
நாட்டில் யாரும் பட்டினிக்கு ஆளாகக் கூடாது. உணவுப் பதுக்கல்காரர்கள், கருப்புச் சந்தைக்காரக்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஸ்வைன் ப்ளூ பாதிப்பு குறித்து யாரும் பீதி கொள்ள வேண்டாம். அதைக் கட்டுப்படுத்த முழு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நோய் பீதியால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது.
அரசின் வளர்ச்சித் திட்டங்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். ஒவ்வொரு இந்தியனும் செழிப்புடனும், பாதுகாப்புடனும், கெளரவத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.
சர்வதேச சிக்கலால் சரிந்துவிட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் 9 சதவீதம் அளவுக்கு இட்டுச் செல்வது மிகப் பெரும் சவாலாக இருக்கும். இந்த ஆண்டில் நிலைமை கொஞ்சம் முன்னேறும் என்று கருதுகிறோம்.
நாட்டில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள வற்டசியை சமாளிக்க விவசாயிகளுக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும். மக்கள் நீரை வீணாக்க்காமல் பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகள் கடன்களை திருப்பி செலுத்தும் கால அவகாசம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும்.
நம்மிடம் போதுமான உணவுக் கையிருப்பு உள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
நாட்டுக்கு இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம். விவசாயத்துறையில் நாம் 4 சதவீத வளர்ச்சியை எட்டியாக வேண்டும். அதை அடுத்த 5 ஆண்டுகளில் எட்டிவிட முடியும் என்று நம்புகிறேன்.
ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவ புதிய திட்டம் விரைவில் அமலாக்கப்படும்.
அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியை கருத்தில் கொண்டு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு புதிதாக 20 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
தீவிரவாதத்தை வேறருக்க முயன்று வருகிறோம். அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் வாழவே இந்தியா விரும்புகிறது. துப்பாக்கிகள் மூலம் நமது ஜனநாயகத்தை சீர்குலைத்துவிட முடியாது.
பெண் சிசுக்களைக் கொல்வது என்பது நாட்டுக்கே அவமானம். இந்தச் செயலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியாக வேண்டும்.
பெண்கள் கல்வியறிவு பெற தேசிய பெண்கள் கல்வி இயக்கம் தொடங்கப்படும். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகை செய்யும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.
நாடெங்கும் குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்படும். இதற்காக ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
அதேபோல மத மோதல்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு இந்தியனும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்தால்தான் நாடு முன்னேற்றம் அடைய முடியும் என்றார் பிரதமர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications