'மாயா மாயா எல்லாம் மாயா'...ஒரு மெகா மோசடி!
கடையநல்லூர்: கடையநல்லூர் வங்கியில் ரூ.4 கோடி கடன் வழங்க ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
நெல்லையைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனத்தின் பெண் ஏஜென்டாக உள்ள மாயா ராமை கிரானைட் தொழில் தொடங்க திட்டமிட்ட தென்காசியை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் சந்தித்து கடனுதவி பெற்றுத் தருமாறு கோரியுள்ளார்.
அவருக்கு கடையநல்லூரில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக மாயா ராம் உறுதியளித்தார். கடன் தந்தால் கமிஷன் தருவதாகக் கூறி வங்கி மேலாளர் அய்யா மணியையும் வளைத்துள்ளார் மாயா.
கடன் வாங்க வசதியாக ரூ. 5 கோடி டெபாசிட் வைத்திருந்த ஒருவரது கணக்கின் ஆவணங்களை போலியாக் தயார் செய்துள்ளார் மாயா. பின்னர் அவருக்கே தெரியாமல் அவரது டெபாசிட்டை ஜாமீனாக வைத்து வெங்கடேசனுக்கு ரூ. 2.65 கோடி கடன் பெற்றுத் தந்தார் மாயா. இதற்கு அய்யா மணி உதவினார்.
ஆனால், வங்கியின் ஆடிட்டிங்கின்போது இந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டது. இதையடுத்து வெங்கடேசனிடம் மூத்த வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது மாயாவின் வண்டவாளங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து மாயாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடிக்கு உதவிய கிளை மேலாளர் அய்யா மணியை வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்த வழக்கு பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. மதுரை சிபிஐ பிரிவினர் நடத்திய விசாரணையில் டாக்டர் வெங்கடேசனுக்கு மோசடியாகக் கடன் வழங்க அய்யா மணி ரூ. 35 லட்சம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது.
இந் நிலையில் வெங்கடேசனை கடந்த 11ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதே போல லஞ்சம் வாங்கி வங்கி நிதியை மோசடி செய்த அய்யா மணியும் கைது செய்யப்பட்டார்.
ஆனால், தனக்கு வங்கி தந்த மொத்த பணத்தையும் மாயா ராம் சுருட்டிவிட்டதாக வெங்கடேசன் புகார் தந்தார்.
இதையடு்த்து இந்த வழக்கிலும் மாயா ராமை சிபிஐ கைது செய்துள்ளது. ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மாயா ராம் இந்த வழக்கிலும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications