சென்னையில் கன மழை-திருப்பதியில் வெள்ளம்
சென்னை: சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இந்த மழை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு லேசான தூறலாக ஆரம்பித்த மழை பின்னர் வலுவடைந்து கன மழையாக மாறியது. ராயபுரம், வண்ணாரபேட்டை, தி.நகர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், மாதவரம், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மழை விடாது பெய்தது.
திண்டுக்கல்லில் மழை...
அதே போல் மாலை திண்டுக்கல்லிலும் நல்ல மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.
திருப்பதியிலும்...
அதே போல திருப்பதி மலையில் நேற்று பிற்பகலில் ஆரம்பித்த கன மழை இரவு வரை பெய்தது. இதனால் திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து தீயணைப்பு படையினர் வந்து மோட்டார் பம்புகள் மூலம் நீரை வெளியேற்றினர்.
விடிய விடிய மழை கொட்டியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பிளாட்பாரம் மற்றும் திறந்த வெளி பகுதிகளில் இருந்த பக்தர்கள் நிற்க இடமில்லாமல் தவித்தனர்.
இலங்கையில் தவிக்கும் தமிழர்கள்..
இந்த நிலையில், இலங்கையில் பெய்த கன மழையால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.
முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக கூடாரங்கள் நீரால் சூழப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கொட்டும் மழையிலும் சகதியிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
