Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

Swine Flu
சென்னை: தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

சென்னையில் தாம்பரம் கிருஸ்துவக் கல்லூரியில் பயிலும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே போல செங்கல்பட்டில் 2 பெண்கள், ஒரு குழந்தைக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் ஒரு குழந்தை, இரு மாணவர்கள், ஒரு வாலிபர் ஆகிய நால்வருக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்புப்படையில் ஐ.ஜியாக உள்ள உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதாப் சிங்கின் மகன் சத்யசனத்சன் (19) தாம்பரம் கிருஸ்துவக் கல்லூரியில் பொலிடிகல் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வரும் இவர் கடந்த வாரம் சொந்த ஊருக்குப் போய் வந்தார். இந் நிலையில் திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு 2 மணிக்கு அவர் ஆம்புலன்ஸ் மூலம் தண்டையார்பேட்டை தொற்று நோய் தடு்ப்பு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

இவர் மூலமாக விடுதி, கல்லூரியில் மற்ற மாணவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவி இருக்குமா என்று டாக்டர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை தமிழ்நாட்டில் 64 பேர் பாதிக்கப்பட்டு அதில் 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.

இப்போது மதுரையில் 4 பேரும், சென்னையில் 4 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டில் 2 பெண்கள், குழந்தைக்கு ஸ்வைன்:

இந் நிலையில் செங்கல்பட்டு வேதாசலம் நகரை சேர்ந்த ஜெயந்தி (17), பெரிய நத்தம் பகுதியை சேர்ந்த மற்றொரு ஜெயந்தி (38), ஆகியோருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதே போல் புனேயில் இருந்து செங்கல்பட்டு வந்த 3 வயது பெண் குழந்தைக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. அந்த குழந்தையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 4 பேருக்கு பாதிப்பு:

கோவையில் ஒரு 5 வயது குழந்தை, ஒரு வாலிபர், இரு பள்ளி மாணவர்களுக்கும் ஸ்வைன் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி:

இந் நிலையி்ல் பன்றிக் காய்ச்சல் தொடர்பான பரிசோதனைகள் நடத்த சென்னையில் 3 ஆய்வகங்கள் மற்றும் கோவை, திருச்சியில் தலா ஒரு ஆய்வகம் என மொத்தம் 5 தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் எச்1என்1 (பன்றி காய்ச்சல்) நோய் பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. இந்த நோயினால் தமிழகத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வு கூடத்துக்கு அதிக அளவில் வருகிறார்கள். இதனால் பரிசோதனை முடிவுகளை தருவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

காய்ச்சல் கண்டுள்ள அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஸ்வைன் ப்ளூ' நோயின் அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே தொண்டைக்குழி திசு மற்றும் சுவாசக் குழாய் திசு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆய்வக பணியாளர்களுக்கு எவ்வாறு மாதிரிகள் எடுப்பது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் எடுப்பதற்கு தேவையான மருத்துவ சோதனைக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளிலேயே மாதிரிகள் எடுக்கப்பட்டு கிண்டி கிங்ஸ் ஆய்வு நிலையம், வேலூர் கிருஸ்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும்

பன்றி காய்ச்சல் நோயின் மாதிரிகளை பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ள தனியார் ஆய்வு கூடங்களையும், இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்பேரில் விருப்பம் தெரிவிக்கும் தனியார் ஆய்வு கூடங்களை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனியார் ஆய்வு கூடங்களை ஆய்வு செய்து பரிந்துரை செய்ததன் பேரில், ஸ்வைன் ப்ளூ மாதிரிகளை பரிசோதனை செய்து அறிக்கை கொடுக்க முதல் கட்டமாக 5 தனியார் ஆய்வு கூடங்களை அரசு அங்கீகரித்துள்ளது.

அவை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பாரத் ஸ்கேன்ஸ், சென்னை தியாகராய நகரில் உள்ள ஹைடெக் டையக்னாஸ்டிக் சென்டர், சென்னை தியாகராயநகர் பர்க்கிட் ரோட்டில் உள்ள டயக்னாஸ்டிக் சர்வீசஸ் மற்றும் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம், கவுலி பிரவுன் ரோட்டில் உள்ள மைக்ரோ லேப், திருச்சி தில்லை நகரில் உள்ள டாக்டர் ராத்ஸ் லேப் (டாக்டர்ஸ் டையக்னாஸ்டிக் சென்டர்).

இக்குழு மேலும் சில தனியார் ஆய்வு கூடங்களை ஆய்வு செய்து வருகிறது. குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் மேலும் சில தனியார் ஆய்வு கூடங்கள், அரசால் அங்கீகரிக்கப்படவுள்ளன.

பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் விரும்பினால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கூறப்பட்டுள்ள தனியார் ஆய்வு கூடங்களில் தொண்டைக்குழு திசு மற்றும் சுவாசக் குழாய் திசு மாதிரிகளை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கு, தனியார் ஆய்வகங்களில் முதல்கட்ட பரிசோதனைக்கு, ரூ.750 வசூலிக்கப்படும்.

முதல்கட்ட பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானால் அதை உறுதிப்படுத்தும் சோதனைக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இரண்டாவது கட்ட சோதனையை அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்வதே நல்லது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+