ஆஸி.யில் இந்திய டாக்டரை தாக்கியவர் கைது
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய டாக்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவி்த்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த டாக்டர் முகேஷ் ஹெய்கர்வால் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்தார். அவர் ஆஸ்திரேலியாவின் மெடிக்கல் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி மெல்போர்னில் இருக்கும் வில்லியம்ஸ்டவுன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர் கொள்ளையர்களால் தாக்கப்ப்டடார். அந்த கும்பல் அவரை அடித்து, உதைத்து துன்புறுத்தியது.
பின்னர் அவரை கீழே தள்ளி, பேஸ்பால் மட்டையால் தலையில் அடித்துள்ளது. இதில் டாக்டர் முகேசுக்கு மூளையில் இரண்டு இடங்களில் ரத்தம் உறைந்து போனது. அவரது மண்டை ஓட்டில் லேசான விரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் கோமாவில் சுய நினைவின்றி கிடக்கிறார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நேற்று இந்த வழக்கு தொடர்பாக அசோபார்டி என்ற 20 வயது இளைஞனை கைது செய்தனர்.
இதை தவிர்த்து அந்த நபர் மீது மேலும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமந்தா சாம்பர்ஸ் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பரில் நடத்தப்படும் என்றும், அதுவரை அவரை சிறையில் அடைக்குமாறும் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications