9 மாநிலங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிப்பு

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் பேசிய அவர், இத் தகவலைத் தெரிவித்தார்.
பவார் கூறுகையில், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே போல உணவுப் பாதுகாப்பும் முக்கியம்.
தாமதமான மழை காரணமாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், பிகார், ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகலாந்து ஆகிய 9 மாநிலங்களும் தங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து தேசிய இடர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி கோரியுள்ளன.
இந்த மாநிலங்களில் நிலைமையை ஆராய்ந்துள்ள மத்திய அரசு முதல் கட்டமாக உத்தரப் பிரதேசம், பிகார், அஸ்ஸாம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு முதல் கட்டமாக நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த மாநிலங்களில் அறுவடைக்காக காத்திருக்கும் பயிர்களைக் காக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக போதுமான விதைகளை இருப்பு வைக்க நிதி ஒதுக்கப்படும்.
மாநில அரசுகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறுகிய கால பயிர்களை பயிர் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.
வறட்சி..பீதி வேண்டாம்- பிரதமர்:
இந்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் வறட்சி நிலை கண்டு பீதி அடையத் தேவையில்லை என்றார்.
பிரதமர் பேசுகையில், வறட்சி நிலை பீதியை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்த அறிவு அரசிடம் உள்ளது. மேலும் கோதுமை, அரிசி உள்ளிட்டவை நமது கிட்டங்கிகளில் போதிய அளவுக்கு இருப்பும் உள்ளது.
வறட்சி நிலையை சமாளிக்க மத்திய அரசு அமல்படுத்தி வரும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், தேசிய விவசாய வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை கை கொடுக்கும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications