பிகாரில் ஐஏஎஸ் அதிகாரிக்கு பன்றி காய்ச்சல்
பாட்னா: இதுவரை பன்றி காய்ச்சல் பரவாமல் இருந்த பிகாரிலும் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனில் இருந்து பிகார் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வந்த நிலையில் பிகார் மாநிலத்தில் நேற்று வரை இந்த நோய் பரவியதற்கான அறிகுறி இல்லாமல் இருந்தது.
ஆனால், தற்போது சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் மருத்துவர்கள் பார்வையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு புரோபைலேக்டிக் டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிகார் மாநில அரசு விரைவில் வைரஸ் சோதனை மையம் ஒன்றை பாட்னாவில் துவக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
ஒரே நாளில் 220 பேருக்கு பரவியது...
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் பன்றி காய்ச்சல் 220 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக மும்பையில் 90 பேரும், புனேவில் 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 20, பெங்களூரில் 11 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகராஷ்டிராவில் தான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அறிகுறிகளுடன் இருக்கும் மாணவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிர சுகாதார துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications