ஆப்கன் அதிபர் கர்சாய் வீடு மீது ராக்கெட் வீச்சு
காபூல்: ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயின் வீட்டின் மீது ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் சுற்றுச்சுவர் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக வேறு உயிரிழப்பு ஏதும் இல்லை.
அதேபோல காபூலில் உள்ள போலீஸ் தலைமையகம் மீதும் தீவிரவாதிகள் ராக்கெட் வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்னும் 2 நாட்களில் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடந்த முதல் தாக்குதலில் கர்சாய் தங்கியுள்ள மாளிகையின் சுற்றுச் சுவர் மட்டும் உடைந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது ராக்கெட் வீசப்பட்டது.
தலிபான்களின் இந்த தாக்குதலால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் உயிரிழப்பு ஏதும் இல்லை. அதிபர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், அதை சீர்குலைக்கும் முகமாகவே இந்த தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்களை தாங்களே நடத்தியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ராய்ட்டர் நிறுவனத்திற்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
நான்கு ராக்கெட்களை வீசி தங்களது போராளிகள் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications