பன்றி காய்ச்சல் பீதி தேவையில்லை-தமிழக அரசு

அவர் கூறுகையில்,
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பெருமளவுக்கு கட்டுக்குள் உள்ளது. எனவே மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை. மக்கள் யாரும் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட தேவையில்லை.
மேலும் 3 பரிசோதனை கூடத்துக்கு அனுமதி...
பன்றி காய்ச்சல் பரிசோதனைக்கு தேவையான மருந்துகள் நம்மிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. இதன்மூலம் நோயை குணப்படுத்திவிடலாம். பன்றி காய்ச்சல் நோய் பரிசோதனை செய்ய மேலும் மூன்று தானியார் பரிசோதனை கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மழை காலத்தில் சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவது சகஜம். காய்ச்சல் ஒரு நாளில் குணமாகவில்லை என்றால் உடனடியாக பன்றி காய்ச்சல் குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
தாய்-மகளுக்கு அறிகுறி..
இந் நிலையில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதால் தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து இவரது தாயார் சஞ்சனாவும் (45) இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நெய்வேலியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு...
நெய்வேலியில் ஸ்வைன் ப்ளூ பரவுவதைத் தடுக்க நிலக்கரி கழக நிர்வாகம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
என்எல்சி குடியிருப்புகளில் ராசயன மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
சாக்கடைகள், தண்ணீர் தேங்கியிருக்கம் பகுதிகளில் சரி செய்யப்பட்டு வருகிறது. அங்கு கொசு மருந்து அடிக்கப்படுகிறது. மேலும், நகரில் இருக்கும் சுமார் 45 ஆயிரம் அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் முககவசம் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications