ஸ்வைன்: மேலும் 3 பேர் - இதுவரை 38 பேர் மரணம்
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த 38 வயதுப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார். அவரைத் தொடர்ந்து 31 வயது வாலிபரும் இன்று இறந்தார்.
பெங்களுரில் நேற்று 45 வயதான எட்வர்ட் டேவிட், 36 வயதான கல்பனா ஆகியோர் பன்றிக் காய்ச்சல் நோய்க்குப் பலியாயினர். இதில் டேவிட், கன்னிங்காம் ரோட்டில் உள்ள ஷிபா மருத்துவமனையிலும், கல்பனா மத்திகரேயில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையிலும் பலியாயினர்.
அதே போல மகாராஷ்டிர மாநிலம் ஓளரங்காபாத்தில் அர்ஜூன் பிகாரி என்ற 40 வயது விவசாயியும் பலியாகியுள்ளார்.
புனேவில் விஜய் அவகடே என்பரும் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். இவரைத் தவிர புனே சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
நாசிக்கில் மேலும் 2 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானாதாக செய்திகள் வந்தாலும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இவர்கள் தவிர உத்தரகாண்ட், சட்டீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் 38 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
இதில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 20 பேரும், இதில் 15 பேர் புனேவைச் சேர்ந்தவர்கள், கர்நாடகத்தில் 7 பேரும், குஜராத்தில் 4 பேரும், டெல்லி, சட்டீஸ்கரில் தலா இருவரும், தமிழகம், உத்தரகாண்ட், கேரளத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
நேற்று மட்டும் 216 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் 48 பேரும், புனேவில் 36 பேரும், சென்னையில் 30 பேரும், டெல்லியில் 25 பேரும் அனுமதிக்கப்ப்டடுள்ளனர்
இதனால் இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 2,242 ஆக உயர்ந்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications