நாளை வாக்கு எண்ணிக்கை-தட்ஸ்தமிழில் 'லைவ்'

பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
கம்பம் தொகுதியில் 76.2 சதவீதமும், ஸ்ரீவைகுண்டத்தில் 72.46 சதவீதமும், பர்கூரில் 71.02 சதவீதமும், இளையான்குடியில் 67.02 சதவீதமும், தொண்டாமுத்தூரில் 58.16 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின.
இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன.
11 மணிக்குள் முடிவு தெரியும்...
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள்.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 11 மணிக்கெல்லாம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அப்-டேட்டை நாளை காலை 8 மணி முதல் தட்ஸ்தமிழில் பார்க்கலாம்.
எங்கெங்கு எண்ணப்படுகின்றன...?
தொண்டாமுத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை, கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாக கட்டடத்தில் நடைபெறுகிறது. இதற்காக, 2 அறைகளில் தலா 14 மேஜைகள் வீதம் 28 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கான வாக்குகள், சாயர்புரம் போப் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படும்.
பர்கூர் தொகுதி ஓட்டுக்கள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், இளையாங்குடி ஓட்டுக்கள் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படும்.
கம்பம் தொகுதி ஓட்டு எண்ணிக்கை, உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்னணி நிலவரம் தெரிய வரும். 11 மணிக்கு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications