பாக். தாலிபான்-மௌல்வி பகிர் புதிய தலைவர்
இஸ்லாமாபாத்: பைதுல்லா மெக்சுத்தின் உடல்நிலை மோசமாக இருப்பதால் தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக தான் பதவியேற்று கொண்டதாக அந்த அமைப்பின் தளபதிகளில் ஒருவரான மெளல்வி பகிர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் நடத்திய தாக்குதலில் தாலிபான் தலைவர் பைதுல்லா மெக்சுத் கொல்லப்பட்டார். ஆனால், தாலிபான் இதை மறுத்துவருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தாலிபான் அமைப்பின் தலைராக, அந்த அமைப்பின் ராணுவ தளபதி மௌல்வி பகிர் தன்னை தானே அறிவித்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் ஆப்கானி்ஸ்தானை சேர்ந்த ஒரு நிருபரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது மெளல்வி கூறுகையில்,
மெக்சுத் உயிருடன் தான் இருக்கிறார். ஆனால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் தான் தற்போது நாங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறோம்.
மெக்சுத் தனது உயிரை தியாகம் செய்தாலும் தாலிபான் அமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அடுத்த தலைவரை தேர்வு செய்ய நடக்கும் தாலிபானின் சுரா கூட்டம் நடக்கவில்லை. இது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கைகள் ஆதாரமற்றவை என்றார் மௌல்வி பகிர்.












Click it and Unblock the Notifications