தமிழகத்துக்கு ரூ.450 கோடி வறட்சி நிவாரண நிதி! - வீரபாண்டி ஆறுமுகம்
டெல்லி: தமிழகத்தில் விவசாயப் பயிர்களைக் காக்க இந்த பருவத்துக்கு தேசிய பேரிடர்பாட்டு நிதியிலிருந்து ரூ.325 கோடி உதவி வேண்டும் என தமிழக விவதசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பாசனத் தேவைகளுக்காக கூடுதலாக 800 மெகாவாட் மின்சாரம் தேவை என்றும் இதற்கென ரூ.125 கோடியை தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
டெல்லியில் நடந்த மாநில விவசாயத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற வீரபாண்டி ஆறுமுகம், தமிழகத்தின் விவசாயத் தேவைகளுக்காக பல கோரிக்கைகளை முன் வைத்தார்.
அவர் பேசியதாவது:
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு மிகக் குறைந்த நிலப்பரப்பில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக 19.28 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்படும், இந்த ஆண்டோ வெறும் 7.26 ஹெக்டேரில்தான் பயிரிடப்பட்டுள்ளது.
எனவே இப்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் பேரிடர் நிவாரணத் தொகையான ஹெக்டருக்கு ரூ.4000 என்ற அளவை ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும்.
விவசாயம் நடைபெறும் பகுதிகளில் பயிர்களைக் காக்க அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது ரூ.165 கோடி செலவில் காவேரி - குண்டாரு திட்டமும், ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாறு-நம்பியாறு திட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய அரசு விரைவில் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தை கையிலெடுக்க வேண்டும், என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications