தமிழகத்தில் மீண்டும் சிக்குன்குனியா பரவுகிறது

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை 3 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக மக்களை வாட்டி வதைத்த சிக்குன்குனியா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
சிக்குன்குனியா வந்து கை, கால்கள் முடக்கப்பட்டு, உடல் வலி, அசதி என மக்கள் பெரும் அவதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் நோய் இது.
தற்போது இந்த சிக்குன்குனியா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிக்குன்குனியா பரவி வருகிறது.
சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஊசி போடும் அறை ஒன்று தான் உள்ளது. இதனால் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து இருந்து ஊசி போட்டு செல்கிறார்கள்.
உடனடியாக தேன்கனிக்கோட்டை பகுதிக்கு மருத்துவக் குழுவை அரசு அனுப்பி வைத்து ஆரம்பத்திலேயே சிக்குன்குனியா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ராட்சத கொசுக்கள் காட்டுப் பகுதியிலிருந்து பெருமளவில் வருவதாகவும், அவற்றை வீரியம் மிக்க மருந்துகளை அடித்து ஒழிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு சிக்குன்குனியா வந்து வேகமாக பரவிய நிலையிலும், அரசு ஆரம்பத்தில் சுதாரிக்கவில்லை. பின்னர் பாதிப்பு பெருமளவில் உயரத் தொடங்கியபோதுதான் விழித்தெழுந்து நடவடிக்கைகளில் குதித்தது.
தற்போது பன்றிக் காய்ச்சல் வேறு பரவிக் கொண்டிருப்பதால் மக்கள் சிக்குன்குனியாவில் சிக்கி விடாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications