பிகாரில் ராகுல் காந்தி பெயரில் போலி லைசென்ஸ்
பாட்னா: பிகாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒன்றில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பெயரில் வேறு ஒருவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குளறுபடி எல்லாம் பிகார் மாநிலம், சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்துள்ளது.
இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,
1847/09 என்ற எண் கொண்ட டிரைவிங் லைசென்ஸ் ஒன்று ராகுல் காந்தி பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் தந்தையின் பெயர் என்று மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரும், நிரந்தர வீட்டு முகவரியாக சன்சத் பவன் மார்க் (நாடாளுமன்றம் இருக்கும் தெரு), டெல்லி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பு முகவரியாக சரன் மாவட்ட நீதிபதியின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லைசென்சில் புனிதா ஸ்ரீவ்ஸதவா என்று வட்டார அலுவலரின் பெயரும், முத்திரையும் குத்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு மே 18ம் தேதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அரசு அலுவலகங்களில் அதுவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கும், காசு கொடுத்தால் இந்தியாவில் எதையும் செய்யாமல் என்பதற்கும் இதை விட வேறு நல்ல சாட்சி தேவையில்லை.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீவஸ்தவா ஒரேடியாக மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில், இது போலி லைசென்ஸ். இதிலிருக்கும் கையெழுத்து, முத்திரை அனைத்தும் போலியானது. எனது பெயரை கெடுக்க இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
இப்படி பிரபலங்களின் பெயரில் போலி லைசென்ஸ் வாங்குவது இந்தியாவில் முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 1990ல் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் பிகாரில் ஒரு லைசென்ஸ் பெறப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications