ஆவின் பால் விலை ரூ. 2.50 உயர்வு

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இன்று பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்,, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர்கள், பால்வளத்துறையின் ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
பசும்பால் தற்போது லிட்டர் 13 ரூபாய் 54 காசு என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இனி இது 15 ரூபாய் 54 காசுக்கு கொள்முதல் செய்யப்படும். அதேபோல எருமை பால் 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இனி இது 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்த கொள்முதல் விலை உயர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
பாலை கொள்முதல் செய்யும் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விற்பனை விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆவின் மாதாந்திர பால் அட்டையின் விலை உயர்த்தப்படுகிறது.
அட்டைக்கு 15 ரூபாய் 75 காசு என்ற விலைக்கு வழங்கப்பட்ட ஒரு லிட்டர் பால் இனி 17 ரூபாய் 75 காசுக்கு விற்கப்படும். இதன்மூலம் இந்தப் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது.
அதே போல சமன்படுத்திய பால் தற்போது லிட்டர் 18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி இந்த பால் 20 ரூபாய் 50 காசு என்ற விலைக்கு விற்கப்படும். அதாவது இந்தப் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2.50 உயர்கிறது.
இந்த விலை உயர்வும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications