ஓசூர் அருகே பஸ்-லாரி மோதல்: 9 பேர் பலி
ஒசூர்: ஓசூர் அருகே சூலகிரியில் லாரி மீது பின்னால் சென்ற அரசு பஸ் மோதியதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 9 பேர் பலியாயினர்.
நாமக்கல்லில் இருந்து காற்றாலை உதிரிப் பாகங்களை ஏற்றிக் கொண்டு ஒரு டிரைலர் லாரி பெங்களூர் சென்று கொண்டிருந்தது. சுமார் 40 அடி நீளம் கொண்ட அந்த லாரியில் 60 அடி நீளம் கொண்ட இரும்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டு அதில் காற்றாலையின் விசிறிகள் ஏற்பட்டிருந்தன.
இதனால் லாரியின் பின்புறம் 20 அடி நீளத்துக்கு அந்த பிளாட்பாரமும், விசிறிகளும் நீட்டிக் கொண்டிருந்தன.
இந் நிலையில் சேலத்திருந்து நள்ளிரவில் அரசு பஸ் ஓசூர் புறப்பட்டது. அதில் 40 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3.30 மணியளவில் சூலகிரி அருகே சென்றபோது கண்டெய்னர் லாரியின் நீட்டிக் கொண்டிருந்த பிளாட்பார்ம் மீதும் அதில் ஏற்றப்பட்டிருந்த விசிறிகள் மீதும் பஸ் மோதியது.
இதில் பிளாட்பார்மும் விசிறிகளும் பஸ்சின் 6வது வரிசை சீட் வரை சொருகின. இதில் பஸ் டிரைவர் தனசேகரன், கண்டக்டர் காமராஜ் உள்பட 9 பேர் பலியாயினர்.
மேலும் 3 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பெங்களூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.












Click it and Unblock the Notifications