சொத்து கணக்கு-அதிகாரிகள் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் சொத்து கணக்கை காட்டாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசுகையில்,
புதுச்சேரியில் காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையில் உள்ள அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் அனைவரும் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் நன்னடத்தை விதிகளின்படி தங்கள் சொத்துகளைக் கணக்கு காட்ட வேண்டும்.
தற்போது புதுச்சேரியில் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் 3,850 பேர் உள்ளனர். இதில் 820 பேர் மட்டும் தங்களது சொத்துகளைக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் கணக்கை காட்டவில்லை.
அகில இந்திய அளவில் இப்போது நீதிபதிகள் கூட தங்களது சொத்து கணக்கைக் காட்டும் நிலை வந்துள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிடும் நாங்களும் சொத்துக் கணக்கை காட்டுகிறோம். எனவே, அரசு அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்குப் முதல்வர் வைத்தியலிங்கம் பதில் அளித்து பேசுகையில்,
இந்த விவகாரத்தில் அரசுக்கு மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை. எனவே, சொத்துக் கணக்கை காட்டாத அதிகாரிகளிடமிருந்தும் சொத்து கணக்கு தாக்கல் செய்ய உரிய வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications